மாணவர் ஒழுக்கக் கோவை
1.0 மாணவர் வரவும் நாளாந்த செயற்பாடுகளும்
1.1 பாடசாலைக்கு சமுகமளிக்கும் நேரம்.
காலை 7 மணி 30 நிமிடத்துக்கு பாடசாலை ஆரம்பமாகும். எனினும் 15 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளித்தல் வேண்டும்.
காலை 7.20 மணிக்கு பாடசாலையின் பிரதான வாயில் மூடப்பட்டு அதன் பின்னர் வருகை தரும் மாணவர்கள் ஒழுக்காற்றுக் குழுவினரால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
மாணவர் வரவு
முதலாம் பாடவேளை முடிவடையும் போது வகுப்பாசிரியரினால் மாணவர் வரவு இடாப்பில் அடையாளமிடப்படும்.
பாடசாலைக்கு வருகை தராத மாணவர்கள் அதற்கான காரணம் குறிப்பிடப்பட்ட மன்னிப்புக் கடிதத்தை தமது பெற்றோர் பாதுகாவலரிடமிருந்து பெற்று பாடசாலைக்கு வருகை தரும் தினத்தில் வகுப்பாசிரியரிடம் கையளிக்க வேண்டும்.
80மூ க்கு குறைவான வரவுள்ள மாணவர்கள் பரீட்சைகள் இணைப்பாடவிதான செயற்பாடுகள் பாடவிதானத்துக்கு புறம்பான செயற்பாடுகள் என்பவற்றில் பங்குபற்றும் தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.
பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் பாடசாலை முடிவடையும் வரை பாடசாலையில் தங்கியிருப்பது கட்டாயமானது. எனினும் சுகவீனம் அல்லது அவசியத் தேவை காரணமாக இல்லம் செல்ல வேண்டி ஏற்படின் அம்மாணவரால் வேண்டுகோள் கடிதம் எழுதப்பட்டு வகுப்பாசிரியரால் அனுமதிக்கப்பட்ட பின் அதிபர் பிரதி அதிபரிடம் கடிதம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.- அல்லது ever silver lunch box இல் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
உடற்சுகாதாரத்தை பேணுவதில் சுத்தமான குடிநீர் பங்காற்றுகிறது. எனவே ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான கொதித்தாரிய குடிநீரை எடுத்து வரவேண்டும். தமது வகுப்பறையையும் அதன் சுற்றாடலையும் சுத்தமாக பேணுவது மாணவர்களின் கடமையாகும். பாடசாலை ஆரம்பமாகும் முன்னரே தமது வகுப்பறைச் சுத்தம் வெளிச்சுத்தம் என்பவற்றை செய்து முடித்தல் கட்டாயமானது.
பாடவேளை ஆரம்பித்து 5 நிமிடங்களின் பின்னரும் பாட ஆசிரியர் வகுப்பறைக்கு சமுகம் தராவிடின் வகுப்புத் தலைவர் அதனை அதிபருக்கு, பிரதி அதிபருக்கு தெரியப்படுத்த வேண்டும்.- பாடவேளைகளின் போது வகுப்பறைக்கு வெளியே செல்ல வேண்டியேற்படின் Exit card உடன் செல்ல அனுமதிக்கப்படுவார்.
- பாடம் சார்ந்த செயற்பாடுகளுக்காக வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவர்களும் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல வேண்டியேற்படின் அமைதியாக வரிசையில் செல்ல வேண்டும்.
- தமது வீடுகளிலிருந்து உணவு கொண்டு வரும் மாணவர்களுக்கு பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுக்கான உணவை plastic
மாணவ தலைவர்களுக்கான ஒழுக்க விதிகள
தினமும் பாடசாலைக்கு காலை 7.00 மணிக்கு முன்னர் சமுகமளித்தல் வேண்டும்.
வரவுப்புத்தகத்தில் தினமும் வரவையும் வெளிச்செல்வதையும் உறுதிப்படுத்திக் கையொப்பமிட வேண்டும்.
வழங்கப்படுகின்ற கடமைகளையும் பொறுப்புக்களையும் முழு மனதோடு ஏற்று அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.
அதிபர்இ ஆசிரியர்கள்இ ஊழியர்கள்இ பெற்றோர்கள்இ பிரமுகர்கள்இ அதிகாரிகள் போன்றவர்களை கனம் பண்ணி நடந்து கொள்வதோடு சக மாணவர்களுடன் அன்பாகவும் இணக்கமுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
பாடசாலைச் சொத்துக்களை அக்கறையோடு பராமரித்தலும் பாதுகாத்தலும் வேண்டும்.
பாடசாலைக்கும்இ அதிபருக்கும்இ ஆசிரியர்களுக்கும்இ ஊழியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈடுபடுவதோ அல்லது அவற்றுக்கு உடந்தையாக இருக்கவோ கூடாது.
பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் பாடசாலையின் நற்பெயரைப் பிரதிபலிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
தங்களுக்கு வழங்கப்படுகின்ற பாடசாலைச் சின்னம்இ மேலங்கி என்பவற்றை பேணுதலாக பயன்படுத்துவதோடு பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் போது அதனை பாடசாலையில் ஒப்படைக்க வேண்டும்.
பொறுப்புக்கள்இ கடமைகளை நிறைவேற்றும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு அதிபர்இ ஆசிரியர்களை அணுகி தீர்வுகான முயற்சிக்க வேண்டும்.
பாடசாலை சார்பாகக் கலந்து கொள்ளும் சகல நிகழ்வுகளிலும் பாடசாலைச் சீருடையுடனேயே கலந்து கொள்ள வேண்டும்.
பாடசாலை விட்டுச் செல்லும் போது பொறுப்பான பகுதிகளுக்குச் சென்று முழுமையாக அவதானித்தல் வேண்டும்.
பாடசாலைச் சீருடை
பாடசாலையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் பாடசாலைச் சீருடை தவிர்ந்த வேறு உடைகளில் பாடசாலையினுள் பாடசாலை நேரத்தில் வருகை தருதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையில் நடைபெறும் விழாவின் போது மட்டும் மாணவர்கள் கலாசார உடையுடன் வருகை தர அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டிகளில் அல்லது பாடசாலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் மாணவர்களாக இருப்பினும் பாடசாலைச் சீருடையுடன் சமுகமளித்து தமக்குரிய உடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மாணவனின் சீருடை
உடைகள் உடலுடன் ஒட்டாதவாறு தளர்வாக இருத்தல் வேண்டும்.
தலைமுடி பாடசாலைக்கு உரிய விதத்தில் அளவாக வெட்டப்பட்டுஇ எண்ணெய் தேய்த்து பக்கவாட்டில் வாரப்பட்டிருக்க வேண்டும். வித்தியாசமான முறையில் முடி வெட்டிய மாணவர்கள் ஒழுக்காற்றுக் குழுவின் தண்டணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
முகம் சுத்தமாக சவரம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.(clean shaven)
நகங்கள் வெட்டப்பட்டு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
கழுத்தில் எந்த விதமான மாலைகளோ நூல்களோ அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.
மாணவியின் சீருடை
இடுப்பில் மடிப்புகள் வைத்துத் தைக்கப்பட்ட இடுப்புப் பட்டியுடன் கூடிய வெள்ளை நிறச் சட்டை அணிய வேண்டும். அதன் நீளம் முழங்காலிற்குக் கீழாகவும்இ முழு நீளக்கையுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
வெள்ளைக் காலுறையும்(socks) வெள்ளை நிற சப்பாத்து(shoes) அணிய வேண்டும்.
தலைமுடி இரண்டாகப் பிரித்து கறுத்தப் பட்டியால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
விரல் நகங்கள் கத்தரிக்கப்பட்டு சுத்தமாக இருத்தல் வேண்டும். நகப்பூச்சுக்கள் பூசப்பட்டிருக்கக் கூடாது. கழுத்தில் கையில் விரல்களில் மூக்கில் எந்தவித ஆபரணங்களும் அணியக் கூடாது. காதில் மட்டும் எளிமையான காதணி (மொட்டு) அணியலாம்.