
பாடசாலைக் கீதம்
ஆதி முதல்வா அருள் மறை இறைவா
அகலதுன் பாதம் நாம்
அன்பாய்த் தினமே நாம் பணிந்தோமே
பார் எம்மைக் கண்பாரும்
( ஆதி முதல்வா )
நீர்வளம் நிறைந்து வயல்வளம் செறிந்த
மாநகர் பேராற்றுவெளி வாழும்
பாவம் என்பதறியாய்ப் பாலகர் நாங்கள்
செய் பிழை பொறுப்பாயே
( ஆதி முதல்வா )
உயர்கலை நெறியும் உளமதில்தோங்க
உயர்குணமே தாங்கி
திருமறை நெறியாம் தரணியில் ஓங்க
அனுதினம் அருள்வாயே
( ஆதி முதல்வா )
உலகினர் புகழும் கலை பல திகழும்
செந்தமிழே கமழும்
எம் கலைக்கூடம் மாண்புடன் ஓங்க
அன்பருள் செரிவாயே
( ஆதி முதல்வா )
மங்களக் கலை தருவோராம்
எங்களதாசிரியோரின்
பங்கய பதமே நாம் பணிந்தோமே
பார் எம்மைக் கண்பாரும்
( ஆதி முதல்வா )